பஹ்ரைன், குவைத் நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

குவைத் சிட்டி, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

மத்திய கிழக்கில் பதற்றம்

அதேவேளை, அமெரிக்காவுடனான மோதலை தொடர்ந்து ஹர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதையடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. மோதலை குறைக்க அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இதனிடையே, அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியில் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. ஈரான் மீது கடந்த 26ம் தேதி அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொர்ந்து மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானில் குவாசம் தீவு பகுதியில் உள்ள ராணுவ கட்டமைப்பு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக குவைத் , பஹ்ரைன் நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here