திருவாரூர், டெல்லியில் இளைஞர்கள் மீதான தாக்குதலை கண்டித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
டெல்லி வன்முறை
டெல்லியில் நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் தடியடி போன்ற தாக்குதல்கள் நடத்தினர்.
இதனைக் கண்டிக்கும் விதமாக பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து மத்திய அரசின் செயலுக்கு மன்னார்குடி மாணவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.









