காவிரி விவகாரம்: முதல்-அமைச்சர் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து – அமைச்சர் செங்கோட்டையன்…

காவிரி விவகாரத்தில் முதல்-அமைச்சர் விஜய் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வருகிறது, அதனால் அவர் வாய் திறப்பதில்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு,அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை எனத் திமிராகப் பேசியுள்ள ‘கட்சித் தாவல் வல்லுநர்’ நிர்மல் குமார்

காவிரி தொடர்பாகத் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது? என

முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பி உள்லார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரோடு கோபி செட்டி பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தில் எல்லாரையும் ஒருங்கிணைத்து தான் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதில் கருத்து வேறுபாடுகள் இல்லை.

அண்டை மாநிலத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு இருக்கிறது என்பதை உதாரணம் காட்டி, எங்களிடத்தில் கேள்வி கேட்பதைக் காட்டிலும், எல்லோரும் ஒருங்கிணைந்து டெல்டா விவசாயிகளை வாழ வைக்க வேண்டும் என்பது எல்லோருடைய கனவு.

அந்த கனவு நிறைவேறும் காலம். வெற்றிகரமாக நேற்று துவங்கப்பட்டு உள்ளது. நல்ல ஒரு முதல்-அமைச்சர் நமக்கு கிடைத்து உள்ளார். அந்த காலம் பொற்காலமாக அமையும். முதல்-அமைச்சர் விஜய் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வருகிறது. அதனால் தான் அவர் வாய் திறப்பது இல்லை.

வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் ஆக உள்ளது. அதில் அவர்களின் நலன்களுக்கான அனைத்து திட்டங்களும் இடம்பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here