சென்னை ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்திய முதல்-அமைச்சர் விஜய், உடன் நடிகை திரிஷா இருந்தார்….
ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முன்னணி நடிகர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் விஜய், நடிகை திரிஷா மற்றும் முதல்-அமைச்சரின் தாயார் ஷோபா சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், இந்த நிகழ்ச்சியில், பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.















