LPT1 நெடுஞ்சாலையில் கொடூர விபத்து: 11 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி 4 பேர் பலி! (

கோலாலம்பூர்:

கிழக்குக்கரை நெடுஞ்சாலை 1-இல் (LPT1) லஞ்சாங்கிலிருந்து குவாந்தான் நோக்கிச் செல்லும் பாதையின் 110-வது கிலோமீட்டரில் 11 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட கோர விபத்தில் சிறுவன் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேற்று (ஆகஸ்ட் 31) இரவு 10.44 மணியளவில் இச்சம்பவம் குறித்து அவசர அழைப்பு வந்ததாகப் பகாங் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் முகமட் சலாஹுதீன் ஈசா தெரிவித்தார்.

இவ்விபத்தில் சிக்கிய இரு கார்களில் இருந்த பயணிகள் வெளியேற முடியாமல் இடிபாடுகளுக்குள் மாட்டிக்கொண்டனர்.முதல் காரில் பயணித்த ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதேநேரம் மற்றொரு காரில் பயணித்த ஆண் ஒருவர் உயிரிழந்தார்.

தீயணைப்புப் படையினர் இடிபாடுகளை அகற்றிப் போராடி அவர்களின் உடல்களை மீற்றனர். எனினும், சம்பவ இடத்திற்கு விரைந்த சுகாதார அமைச்சின் மருத்துவக் குழுவினர் அவர்கள் நால்வரும் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.

இந்நிலையில் இக்கொடூர விபத்தில் ஒரு பயணிகள் பேருந்தும் உட்பட மொத்தம் 11 வாகனங்கள் சேதமடைந்தன. இருப்பினும், அந்தப் பேருந்தில் பயணித்த 30 பயணிகளும் எந்தவிதக் காயமுமின்றி அதிர்ஷ்டவசமாகப் தப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here