சரவாக்கில் 6 இடங்களில் காற்றுத் தூய்மைக்கேடு ‘அபாயகரமான’ நிலைக்கு உயர்வு: மக்கள் வெளியே நடமாடத் தடை!

கோலாலம்பூர்:

சரவாக் மாநிலத்தில் புகைமூட்டம் மேலும் மோசமடைந்துள்ளது. இன்று (செப்டம்பர் 1) காலை 8.00 மணி நிலவரப்படி, அம்மாநிலத்தின் 6 பகுதிகள் மனித ஆரோக்கியத்திற்கு மிக மோசமான ‘அபாயகரமான’ காற்றுத் தூய்மைக்கேட்டு (API) அளவைப் பதிவு செய்துள்ளன.

காற்றுத் தூய்மைக்கேடு நிர்வாக அமைப்பின் (APIMS) தரவுகளின்படி, செரியான் மாவட்ட போலிஸ் தலைமையகப் பகுதி நாட்டிலேயே மிக அதிகபட்சமாக 408 API பதிவை எட்டியுள்ளது.

மேலும் அபாயகரமான மண்டலத்தில் உள்ள பகுதிகளாக (API 300-க்கு மேல்), செரியான் போலிஸ் தலைமையகம் 408 API, கூச்சிங் 407 API, சமராகான் 372 API, ஸ்ரீ அமான் 361 API, சாரிகேய் 333 API மற்றும் சிபு 309 API என பதிவாகியுள்ளது.

மிகவும் ஆரோக்கியமற்ற னைய பகுதிகளாக மூக்கா (234), பிந்துலு (232), சமலாஜு (225) ஆகிய 3 பகுதிகள் ‘மிகவும் ஆரோக்கியமற்ற’ (Very Unhealthy) நிலையைப் பதிவு செய்துள்ளன.

இதைத் தவிர, மிரி தொழிற்பயிற்சி கழகம் (187), மிரி (180), காபிட் (178), லாபுவான் (167), லிம்பாங் (166) மற்றும் சபாவில் உள்ள கிமானிஸ், கெனிங்காவ் (156), தாவாவ் (132), சிலாங்கூரின் ஜொஹான் செத்தியா (123) உட்பட 9 பகுதிகள் ‘ஆரோக்கியமற்ற’ (Unhealthy) நிலையைப் பதிவு செய்துள்ளன.

மேலும் நாடு முழுவதும் 48 பகுதிகள் மிதமான காற்றுத்தூய்மை கேட்டு அளவைப் பதிவு செய்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here