ஸ்ரீ இராமகிருஷ்ண ஆசிரமத்திற்கு சுறுசுறுப்பான குழந்தைகள் நல அமைப்புக்கான விருது

(ரெ.மாலினி)

மலாக்கா:

மலாக்கா மாநிலத்தில் நடைபெற்ற மூத்த குடிமக்கள் தினம், மாற்றுத்திறனாளிகள் தினம் மற்றும் குழந்தைகள் தினம் 2026 நிகழ்வில், மலாக்கா பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண ஆசிரமத்திற்கு “சுறுசுறுப்பான குழந்தைகள் நலம்” (Anugerah NGO Kanak-Kanak Aktif) என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.

மலாக்கா முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ உத்தமா அப்துல் ரவூப் யூசோ தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

குழந்தைகளின் நலன், கல்வி, ஒழுக்கம் வளர்ச்சி மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்காக ஆஸ்ரமம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் சேவைகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விருது தனிப்பட்ட முறையில் அமைப்பிற்கான அங்கீகாரம் மட்டுமல்லாமல், ஆஸ்ரமத்தின் குழந்தைகள், நிர்வாகிகள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்ட அனைவரின் கூட்டு சேவைக்கும் கிடைத்த அங்கீகாரம் என ஆஸ்ரமத்தின் தலைவர் டாக்டர் பாலமுரளி கோவிந்தசாமி தெரிவித்தார்.

மேலும், மலாக்கா மாநில சமூக நலத்துறைக்கும் (JKM), தொடர்ந்து வழங்கி வரும் நம்பிக்கை, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்காக நன்றி தெரிவிக்கப்பட்டது.

“மனித சேவையே இறைவனுக்கு செய்யும் சேவை” என்ற கொள்கையுடன், குழந்தைகளின் நலனுக்காக தங்களது சேவையை மேலும் அர்ப்பணிப்புடன் தொடர இந்த விருது ஊக்கமளிக்கும் என ஆஸ்ரமம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here