மலாக்கா தேர்தலில் பெர்சத்துவுடன் ஒத்துழைப்பு இல்லை – PH மலாக்கா

(ரெ.மாலினி)

மலாக்கா:

மலாக்கா மாநிலத்தில் நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் , பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியுடன் ஒத்துழைக்காது என பக்காத்தான் மலாக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பாக்காத்தான் மலாக்கா துணைத் தலைவர் கூ போய் தியோங் கூறுகையில், பி எச் கூட்டணி, தேர்தலில் போட்டியிடவுள்ள 28 சட்டமன்ற தொகுதிகளிலும், PH-க்கு வெளியேயுள்ள எந்தக் கட்சியுடனும் தேர்தல் ஒத்துழைப்பு இல்லாமல் போட்டியிடும் என்றார்.

இந்த நிலைப்பாடு தொடர்பாக DAP மலாக்கா தனது கருத்தை விரைவில் PH தலைவர் மன்றத்திடம் தெரிவிக்கும் என்றும் அவர் கூறினார்.

எனினும், தேர்தலில் அரசியல் ஒத்துழைப்பை உருவாக்க விரும்பும் எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்த PH தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது அவசியம் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதாக அர்த்தமல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

PH – பெர்சாத்து இணைந்து நடத்திய இரவு விருந்தில் தாம் கலந்து கொள்ளாதது குறித்து கேட்கப்பட்டபோது, அது வெறும் விருந்து நிகழ்ச்சி மட்டுமே என்றும், அதனை வைத்து இரு தரப்பும் ஏற்கனவே ஒத்துழைக்கத் தொடங்கிவிட்டதாகக் கருத வேண்டாம் என்றும் அவர் விளக்கினார்.

மேலும், PH-க்குள் கட்சிகளுக்கிடையிலான தொகுதி பங்கீடு முடிவடைந்துவிட்டதாகவும், வேட்பாளர்கள் தொடர்பான அறிவிப்பு அக்டோபர் 7ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தல் ஆணையத்தின் கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்படும் என்றும் கூ
தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here