‘ஜெயிலர் 2’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதில், எப்போது பார்க்கலாம்?…

சென்னை, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 படம் பிரைம் வீடியோவில் வருகிற 12ந் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நட்சத்திரப் பட்டாளத்துடன் ‘ஜெயிலர் 2’
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் 15ந் தேதி தியேட்டர்களில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் ரஜினிகாந்த் மீண்டும் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும், மோகன்லால், சிவராஜ்குமார், விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளைச் சேர்ந்த பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.வசூல் வேட்டை

அதிரடி சண்டைக் காட்சிகள், நகைச்சுவை மற்றும் நட்சத்திரங்களின் சிறப்புத் தோற்றங்கள் என பல அம்சங்களுடன் உருவான இப்படம் வெளியானது முதலே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல வசூலைப் பெற்ற இப்படம், உலகளவில் ரூ.825 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழ் சினிமாவின் அதிக வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் ஒன்றாக ‘ஜெயிலர் 2’ இடம்பிடித்துள்ளது. அடுத்ததாக ரூ.1,000 கோடி வசூலை எட்டுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

பிரைம் வீடியோவில் வெளியாகிறது
இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற நவம்பர் 12ந் தேதி பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தியேட்டரில் படத்தை காண தவறியவர்கள் ஓடிடியில் வீட்டில் இருந்தபடியே கண்டு ரசிக்கலாம். இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த கூடுதல் தகவல் என்னவென்றால், இப்படம் ஓடிடி தளத்தில் சுமார் 30 நிமிட கூடுதல் காட்சிகளுடன் ‘அன்கட் வெர்ஷன்’ ஆக வெளியாகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, சந்தானம், மோகன்லால், விஜய் சேதுபதி, ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்டோர் தொடர்பான நீக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல் பரவி வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here