தெலுக் இந்தானில் கொலை சம்பவம்: மூவர் விளக்கமறியலில் – நான்காவது நபர் கைது

ஈப்போ: தெலுக் இந்தானில் உள்ள கடை ஒன்றின் முன்னால், நபர் ஒருவர் வாளால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  ஹிலிர் பேராக் மாவட்ட காவல்துறைத் தலைவர் (OCPD) உதவி ஆணையர் சுவா கொக் லியான் கூறுகையில், 27 வயதுடைய பெண் ஒருவர் மற்றும் இரு வெளிநாட்டவர் உட்பட மொத்தம் மூவர், நவம்பர் 4 முதல் 11-ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

வியாழக்கிழமை (நவம்பர் 5) உள்ளூர் நபர் ஒருவரை நாங்கள் கைது செய்துள்ளோம். இவரை விளக்கமறியலில் வைக்க இன்று (நவம்பர் 6) நீதிமன்ற உத்தரவைப் பெறுவோம் என்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.கைது செய்யப்பட்ட இரு வெளிநாட்டவர்களும் புதன்கிழமை (நவம்பர் 4) காலை பிடிபட்டனர். கைது செய்யப்பட்டுள்ள ஆண்களில் மூவர் 30 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர்.

முன்னதாக, தாமான் பஞ்சார் ஜெயாவில் 48 வயதுடைய நபர் ஒருவர், மூன்று நபர்களால் வாள்களைக் கொண்டு தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. பலத்த காயமடைந்த பாதிக்கப்பட்ட நபர், சிகிச்சைக்காக தெலுக் இந்தான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here