Home உலகம் வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டம்

வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டம்

– 27,000 நிறுவனங்களில்

130,000 உள்ளூர்வாசிகளுக்கு வேலை

2019ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் அந்நிறுவனங்களால் வேலைக்கு எடுக்கப்பட்ட உள்ளூர்வாசிகளின் இடைநிலை அளவு ஒன்றாக இருந்தது.

ஒட்டுமொத்தத்தில், வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டம் அறிமுகமான முதல் மூன்று மாதங்களில், அதாவது 2020 செப்டம்பர்-நவம்பர் காலகட்டத்தில் ஏறக்குறைய 130,000 உள்ளூர்வாசிகள் பணியமர்த்தப்பட்டனர்.

 

‘பசிபிக் லாஜிஸ்டிக்ஸ்’ எனும் உள்ளூர் நிறுவனத்திற்கு இன்று (மார்ச் 31) வருகை மேற்கொண்டபோது மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ இந்த விவரங்களை வெளியிட்டார்.

அவற்றில் 99 விழுக்காடு , சிறிய, நடுத்தர நிறுவனங்கள். அவற்றில் பத்தில் ஆறு நிறுவனங்கள் ஒன்று முதல் இரண்டு உள்ளூர்வாசிகளையும் எஞ்சிய நான்கு நிறுவனங்கள் அதற்கு மேற்பட்டவர்களையும் வேலையில் அமர்த்தின.

உள்ளூர்வாசிகளைப் பணியில் அமர்த்துவதை ஊக்குவிப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் $1 பில்லியன் மதிப்பிலான வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தகுதியுள்ள நிறுவனங்கள் வேலையில் அமர்த்தும் ஒவ்வோர் உள்ளூர்வாசிக்கும் 12 மாதங்கள் வரை, 25 விழுக்காடு  ஊதிய ஆதரவைப் பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here