அரசு விதிக்கு மாறாக கரோனா செய்தி; வூஹான் பெண் பத்திரிகையாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

சீனாவில் வூஹான் நகரில், அரசு விதிக்கு மாறாக கொரோனா வைரஸ் குறித்துச் செய்திகளை வெளியிட்ட முன்னாள் வழக்கறிஞர், பத்திரிகையாளருக்கு ஐந்து வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிபிசி வெளியிட்ட செய்தியில், ‘வூஹானில் கொரோனா வைரஸ் குறித்துச் செய்திகளை வெளியிட்ட முன்னாள் வழக்கறிஞரும், பத்திரிகையாளருமான சாங் சான் என்ற பெண் மே மாதம் கைது செய்யப்பட்டார்.

சர்ச்சையைத் தூண்டும் வகையில், அரசு விதிகளுக்கு மாறாகச் செய்திகளை வெளியிட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் அரசு விதிக்கு மாறாக கரோனா குறித்துச் செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் பலர் மாயமானதாக சில மாதங்களுக்கு முன்னர் சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியானது நினைவுகூரத்தக்கது.