சீனாவின் கொரோனா தடுப்பூசி எப்படி ?

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 5,59,43,122 பேர். குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3,89,63,186 நபர்கள். இறந்தவர்கள் 13,43,378. தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் எண்ணிக்கை 1,56,36,558.

கொரோனாவைத் தடுக்க தடுப்பூசி மட்டுமே தீர்வு எனும் நிலையை நோக்கி உலகம் சென்றுகொண்டிருக்கிறது. ரஷ்யாதான் முதன்முதலாக கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. சில நாடுகள் ரஷ்யாவின் தடுப்பு மருந்தின் நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பும் என்பதை அறிந்த அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின், ஸ்புட்னிக் V எனும் பெயரிட்ட அந்த தடுப்பூசியை தன் மகளுக்கே செலுத்தச் சொன்னார்.

மேலும், புகழ்பெற்ற மருத்துவ இதழான லாசெண்ட், ஸ்புட்னிக் V பாதுகாப்பானது என்று விரிவான தம் பார்வையை கட்டுரையின் முன் வைத்தது. இந்நிலையில் இன்னும் ஒரு கொரோனா தடுப்பு மருந்து குறித்து லாசெண்ட் இதழ் எழுதியுள்ளது.

சீனாவின் சினொவாக் பயோடெக் கம்பெனி தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை பலகட்ட சோதனைகளில் உள்ளது. பல தன்னார்வலர்களுக்குச் செலுத்தி அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்து வருகிறார்கள்.

இந்தத் தடுப்பூசியைப் பற்றி மருத்துவ இதழ் லாசெண்ட் இதழ், “சினொவாக் தயாரித்துள்ள தடுப்பூசி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனை அளித்த நோயாளிகளிக்கு ஒரு மாதத்திற்குள் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக அதிகரிக்கிறது’ என்று அக்கட்டுரையை எழுதியிருக்கும் அறிவியலாளர் குறிப்பிட்டுள்ளார்.