டிரம்ப் கேலி சித்திரம்’ வைரல்

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்  இரவு வெளியானதை அடுத்து அமெரிக்காவின் 46   ஆவது அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பிடனுக்கும் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. விரைவில் இருவரும் பொறுப்பேற்கவுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல்
டிரம்ப் தனது அறிவிப்புகளை வெளியிட்டு மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.

எனவே டிரம்பை விமர்சித்து பல்வேறு கண்டனங்களும் பதிவுகளும் சமூக வலைதளங்களில் குவிந்து வருகிறது.

இந்நிலையில் டிரம்ப் அடிக்கடி கூறும் யூ ஆர் பயர்ட் என்ற வார்த்தையை சுதந்திரதேவி சிலை டிரம்பிடம் அவரது தோல்வியைக் கூறுவது போன்ற கேலிச்சித்திரம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.