போக்குவரத்துக்கு எதிராக வாகனமோட்டிய நபர்

பட்டர்வொர்த்-

பட்டர்வார்த்-கூலிம் நெடுஞ்சாலை (BKE) இன் 4.8 கிலோ மீட்டரில் போகுன் வரத்துக்கு எதிராக செயல்பட்டது  ஊடகத்தில் வைரலானது. இதில். ஒரு பெரோடுவா அக்சியா ஓட்டுநர் எதிர்ப்பாகசெயல்பட்டதாக  கண்டறியப்பட்டது .

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு இதுவரை அறிக்கை கிடைக்கவில்லை, இருப்பினும், மேலதிக விசாரணைக்காக அவர்கள் சம்பவ இடத்தில் மூடிய-சுற்று தொலைக்காட்சி (சிசிடிவி) காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக செபராங் பிறை தெங்கா மாவட்ட காவல்துறை தலைவர் ஏசிபி ஷாஃபி அப்துல் சமாட் தெரிவித்தார்.

 

இந்த சம்பவத்தில் இருந்து எந்த விபத்தும் ஏற்படவில்லை, இருப்பினும், வாகன ஓட்டியின் நடவடிக்கை மற்ற சாலை பயனர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியதை ஊட்கப்பதிவில் காணமுடிந்தது

போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை அறிந்த பொதுமக்கள் முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

 பட்டர்வொர்த்தை நோக்கிய பாதையில், வலதுபுறம் உள்ள பாதையில் போக்குவரத்து ஓட்டத்திற்கு எதிராக சாம்பல் நிற கார் ஓட்டப்படுவதைக் காட்டும் 51 விநாடி வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது.