மாசு அடைந்த நதி போலீசார் விசாரணை

பெட்டாலிங் ஜெயா:-

ரந்தாவ் பஞ்சாங் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மாசுபடுவதற்கு கழிவுகளைக் கொட்டுவது குறித்து போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிலாங்கூர் காவல்துறை சிஐடி தலைவர் எஸ்ஏசி டத்துக் ஃபாட்ஸில் அஹ்மட் கூறுகையில், இந்த விவகாரம் குறித்து சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியத்தின் (லுவாஸ்) அமலாக்க அதிகாரியிடமிருந்து  போலீசாருக்கு அறிக்கை கிடைத்தது.

லுவாஸின் ஆரம்ப விசாரணையில், கரைப்பான்கள் என்று நம்பப்படும் எட்டு டன் எடையுள்ள ஆலையின் கழிவுகள் கொட்டப்பட்டதில் நீர் மாசடைந்திருக்கிறது. இதன் விளைவாக வீடுகளுக்கான உபயோக   நீர் வழங்கல் நிறுத்தப்பட்டது.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 430  இன் கீழ் நீர்ப்பாசனப் பணிகளில் தீங்கு ஏற்பட்டதற்காக இந்த வழக்கை கோம்பாக் போலீசார் விசாரித்து வருவதாக ஃபாட்ஸில் கூறினார்.

நீர் வெட்டு காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும்  செப்டம்பர் தொடக்கத்தில் இருந்தே நீர் மாசுபாடு குற்றங்கள் நிகழந்து வருவதாக அவர் கூறினார்.

விசாரணையில் உள்ள ஆறு வழக்குகளில் மூன்றில் நிறுவன இயக்குநர்கள்,  அவர்களது ஊழியர்கள் அடங்கிய ஒரு டஜன் பேர் மீது போலீசார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.