ஜார்ஜ் டவுன்:
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் (HEB) புதிய தலைவராக ஜெலுதோங் சட்டமன்ற உறுப்பினர் RSN ராயர் நியமிக்கப்பட்டுள்ளதாக பினாங்கு மாநில அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
இந்த பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் 30, 2023 முதல் ஜூலை 31, 2024 வரையில் அமலில் இருக்கும் என்று பினாங்கு முதல்வர் சௌ கோன் இயோவ் கூறினார்.
கடந்த புதன்கிழமை நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் ராயரை நியமிக்க முடிவு எடுக்கப்பட்ட்தாக அவர் மேலும் கூறினார்.
“பினாங்கு அரசாங்கத்தின் சார்பாக, இந்த புதிய நியமனத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன், அவர் குறித்த வாரியத்தின் செயல்திறனை இன்னமும் வலுப்படுத்த முடியும் என்று நம்புவதாக ” அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ராயர் 2008 ஆம் ஆண்டு முதல் இந்து அறப்பணி வாரியத்தின் துஉறுப்பினராகவும் துணைத் தலைவராகவும் பணியாற்றினார் என்றும், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் புதிய உறுப்பினர்களின் பட்டியலை விரைவில் அறிவிப்பார் என்றும் சோவ் கூறினார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக முன்னாள் பினாங்கு துணை முதல்வர் II P. ராமசாமி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















