மரம் விழுந்து பாதுகாவலர் பலி

ஜோகூர் பாரு: உலு திராமில் உள்ள தாமான் பெலாங்கி இந்தாவில் புதன்கிழமை (செப்டம்பர் 16) அதிகாலை பாகிஸ்தான் பாதுகாப்பு காவலர் ஒருவர் மீது மரம் விழுந்ததால் நசுக்கப்பட்டார்.

புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் தாமான் பெலாங்கி இந்தாவின் ஜாலான் பெசோனா 1 இல் என்ற பாதுகாவலர் பணியில் இருந்தபோது மரம் கவிழ்ந்ததாக  ஜோகூர் பாரு தெற்கு  மாவட்ட OCPD உதவி  ஆணையர்  முகமட் பட்ஸ்லி முகமட் ஜெய்ன் தெரிவித்தார்.

மரத்தின் இடையே  சிக்கிக்கொண்ட அவரை  தெப்ராவ் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் அவ்வாடவரை மீட்க வேண்டியிருந்தது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். அவ்வாடவருக்கு வயது 40 எனவும்  சம்பவ இடத்திலேயே பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக ஏ.சி.பி முகமட் பாட்ஸில் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here