ஒன்றுபட்ட மலேசியா மலர வேண்டும். அதுதான் என்னுடைய விருப்பம் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா  கூறுகிறார். நாட்டின் 16ஆவது மாமன்னராக நாளை ஙெ்வ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அரியணை அமர்கிறார் சுல்தான் அப்துல்லா. இது தொடர்பாக அவர் நேற்று அளித்த நேர்காணல் வருமாறு:ஒன்றுபட்ட மலேசியா மலர வேண்டும். குழப்பம் இல்லாத மலேசியா மலர வேண்டும். அதுதான் என்னுடைய விருப்பம்.

பகாங் பட்டத்து இளவரங்ரானார்

1975ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி  பகாங் மாநில பட்டத்து இளவரங்ராக அறிவிக்கப்பட்ட அவர், 1977ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி பெக்கான் அபு பக்கார் அரண்மனையில் அதற்காக பட்டம் சுட்டப்பட்டார்.

இடைக்கால பகாங் சுல்தான்

1979ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி பகாங் மாநில இடைக்கால ஆட்சியாளராக அல் சீல்தான் அப்துல்லா நியமிக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் அவரது தந்தையார் சீல்தான் ஹாஜி அமாட் ஷா நாட்டின் மாமன்னராக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதைத் தொடர்ந்து பகாங் மாநில இடைக்கால சீல்தானாக பொறுப்பை ஏற்றார் அவர்.

கடந்த 2016ஆம் ஆண்டு டிங்ம்பர் மாதம் 8ஆம் தேதி அவர் மீண்டும் ஒரு முறை பகாங் மாநில இடைக்காலச் சீல்தானாக நியமிக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் தேதி பகாங் மாநிலத்தின் ஆறாவது சீல்தானாக அவர் மாநில ஆட்சியாளர் மன்றத்தால் நியமனம் ஙெ்ய்யப்பட்டார்.

விளையாட்டு ஆர்வலர்

நமது நேயத்திற்குரிய மாமன்னர் விளையாட்டுத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஹாக்கி, போலோ, கால்பந்தாட்டம் ஆகியவை அவருக்கு விருப்பமான விளையாட்டுத் துறைகளாகும். இங்கிலாந்தில் கல்வி மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் பகாங் மாநில அரங் போலோ குழுவிற்கு அவர் தலைமையேற்று இங்கிலாந்து, விண்ட்ங்ர் போலோ கிளப்பில் நடந்த அனைத்துலக போலோ போட்டியில் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர், மணிலா, புரூணை, அர்ஜெண்டினா, அமெரிக்கா, ஸ்பெய்ன், பெல்ஜியம் போன்ற நாடுகளிலும் அவர் போலோ விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

பெக்கானில் ஸ்ரீ மகோத்தா அலாம் என்ற கால்பந்தாட்டக் குழுவைத் தமக்கெனச் ங்ோந்தமாக உருவாக்கியவர் மாமன்னர். கோல்ஃப், கோ கார்ட், அல்ட்ராலைட் விமான விளையாட்டு போன்ற இதர விளையாட்டுகளிலும் மன்னர் ஆர்வம் கொண்டவர்.

பட்டத்து ராணி

மாமன்னரின் பட்டத்தரசி துங்கு அஸிஸா அமினா மைமுனா இஸ்கந்தாரியா. 1960ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5ஆம் தேதி பிறந்தவர் அவர். அப்போதைய ஜோகூர் சீல்தான் சீல்தான் மாஹ்மூட் இஸ்கந்தாரின் மூன்றாவது மகளாவார். 1986ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் தேதி துங்கு அஸிஸாவை ஜோகூர் சீல்தானின் அதிகாரத்துவ இல்லமாக விளங்கும் புக்கிட் ஷெரின் அரண்மனையில் திருமணம் புரிந்தார் அவர்.

மன்னரின் வாரிசீகள்

துங்கு அமிர் நஸிர் இப்ராஹிம் ஷா, துங்கு புத்ரி இமான் அஃப்ஸான், துங்கு புத்ரி இலிஷா அமிரா, துங்கு ஹங்னால் இப்ராஹிம் அலாம் ஷா, துங்கு புத்ரி இலியானா, துங்கு முகமட் இஸ்கந்தார் ரியாத்துடின் ஷா, துங்கு அமாட் இஸ்மாயில் முவாட்ஸாம் ஷா, துங்கு புத்ரி அஃப்ஸான் அமினா ஹஃபிஸாத்துல்லா, துங்கு புத்ரி ஜீஹான்  அஸிஸா  அதியாத்துல்லா ஆகிய ஒன்பது பிள்ளைச் ஙெ்ல்வங்களுக்குத் தந்தை நமது மாமன்னர்.

தனித்துவம் வாய்ந்த விழா

மாட்சிமை தங்கிய மாமன்னரின் இந்தச் சிறப்புக்குரிய முடிசுட்டு விழாவில் அரண்மனை பொறுப்பாளர்களும் இதர ஆட்சியாளர்களும் மட்டும் முனைப்போடு ஙெ்யற்படவில்லை. மாறாக மேன்மைக்குரிய மாமன்னரும் பேரரசியாரும்கூட அதில் தனிப்பட்ட கவனத்தைச் ஙெ்லுத்தி நிகழ்ச்சி நிரல் சிறப்பாய் அமைந்திடுவதற்கான ஆலோங்னைகளையும் வழங்குகின்றனர். பேரரங்ர் தம்பதியரின் வாழ்க்கையில் எப்போதுமே மறக்க முடியாத சிறப்புக்குரிய நாளாக இந்த நன்னாளைத் திகழச் ஙெ்ய்வதற்கான அம்ங்ங்கள் இதில் நிறைந்திருக்கும் என்று அரண்மனை தலைமை அதிகாரியான டத்தோ படுகா மகாராஜா லேலா அஸ்வான்  எஃபெண்டி ஸைராகித்னைனி கூறினார்.

மன்னரின் வாரிசீகள் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் மாமன்னர், பேரரங்ரின் தந்தையர் இதற்கு முன்னரே நாட்டின் பேரரங்ர்களாக அனுபவமும் அவர்களுக்கு உண்டு. அதன் அடிப்படையில் சீல்தான் அப்துல்லாவின் தந்தையார் சீல்தான் அமாட் ஷா அல் முஸ்தாப்பா பில்லா நாட்டின் 7ஆவது பேரரங்ராக முடிசுடியவர்.

பேரரசியாரின் தந்தையார் காலஞ்ஙெ்ன்ற ஜோகூர் மாநில முன்னாள் சீல்தான், சீல்தான் இஸ்கந்தார் நாட்டின் 8ஆவது பேரரங்ராக அரியணை அமர்ந்தவர். தந்தையார் நாட்டின் மாமன்னராக அரியணை அமர்ந்த காலகட்டத்தில் இப்போதைய மாமன்னரும் அவரது பட்டத்து அரசியும் பங்கேற்றவர்கள் என்பதால் 16ஆவது மாமன்னராக தாம் அரியணை அமரும் விழாவிலும் பல சிறப்புகள் அமையப் பெற்றிருக்க வேண்டும் என்று மாமன்னர் கருதினார்.

பழைய அந்த நினைவுகளை மீட்டுத் தரும் அம்ங்ங்கள் இந்த முடிசுட்டு விழாவிலும் இருக்க வேண்டும் என்று அரங் தம்பதியர் விரும்பினர். அதில் முக்கியமானது தமது தந்தையார் மன்னராக பட்டமேற்று அமர்ந்த சிம்மாங்னத்தை மாமன்னரும், தமது தந்தையார் மன்னராக அரியணையில் அமர்ந்த சிம்மாங்னத்தை பேரரசியாரும்  இப்போது அரண்மனையில் மீண்டும் காண விரும்பினர். வாழ்க்கையில் மறக்க முடியாத இந்த நன்னாளில் அந்த சிம்மாங்னங்களே மீண்டும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டு சீரமைக்கப்பட்டு அரியணை அமரும் விழாவுக்கான முக்கிய அம்ங்ங்களாக்கப்பட்டுள்ளன என்பது இந்க வரலாற்று நிகழ்ச்சியின் சிறப்புப் பதிவாகியுள்ளது.

பொறுப்புகள்

பல்வேறு துறைகளுக்கும் தலைமைப் பொறுப்புகளை வகிக்கிறார் மாமன்னர். பகாங் மாநில இஸ்லாமிய ங்மய மன்றத் தலைவராகவும் மலாய்ப் பாரம்பரிய கலைகளின் காவலராகவும் அவர் விளங்குகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here