சிகாம்புட் நாடாளுமன்ற வெட்ரன் கிண்ணப் போட்டி ஓவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடத்தப்படும் – மனோ அறிவிப்பு

சிகாம்புட் நாடாளுமன்ற வெட்ரன் கிண்ணக் கால்பந்துப் போட்டி இனி ஓவ்வோர்  ஆண்டும் மிகச்சிறப்பாக நடத்தப்படும் என்று போட்டி ஒருங்கிணைப்பாளரும் சிலாங்கூர் இந்தியர் விளையாட்டுப் பேரவை உதவித் தலைவருமான மனோ பரமசிவம் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை புக்கிட் கியாரா  இந்தான் அரங்கில் நடந்த இப்போட்டியில் 20க்கும் மேற்பட்ட கிளப்புகள் கலந்து கொண்டன.

கிளப் சீக்காரியா சிகாம்புட் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் ஷா ஆலம் ஸ்ரீமூடாவைச்  ஙே்ர்ந்த பிரகாஷ் எப்.சி. முதலிடத்தை பிடித்து  3,000 வெள்ளி ரொக்கத்தை தட்டிச் ஙெ்ன்றது.

இரண்டாவது நிலையில் எம்.ஆர்.எம். கிளப் 1,500 வெள்ளியை தட்டிச் ஙெ்ன்றது. பெட்டாலிங் சிட்டி கிளப் நிர்வாகி ஏசிபி இராஜன் தலைமையிலான 2020 கிளப் 3ஆவது இடத்தைப் பிடித்து 700 வெள்ளியைப் பெற்றது. உலுபெர்னாம் எப்.சி. 4ஆவது இடத்தைப் பிடித்து 300 வெள்ளியைப் பெற்றது.

இப்போட்டியின் வழி இந்திய இளைஞர்களிடையே ஒற்றுமையை வளர்க்க முடிகிறது என்று குறிப்பிட்ட மனோ பரமசிவம், போட்டியை சிறப்பாக நடத்தி முடித்து நாகராஜனுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here