துப்பாக்கிச் சூட்டில் முடிந்த திருமண நிகழ்ச்சி

பெய்ரூட்,

பால்பெக் நகரத்திற்கு அருகே நடந்த திருமணத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகத்  தெரிவிக்கப்பட்டது.

நேற்று நடந்த அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், கலை நிகழ்ச்சியின் பாடகர் ஒருவரும் அவருடன் சேர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் மரணமடைந்த வேளையில்  மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

திருமணத்தில் ஏற்பட்ட தூப்பாக்கிச் சூட்டுச் சத்தம் சுற்றியுள்ள வாட்டரத்திற்கும் கேட்டதால் நிலைமை மோசமாகாமல் தடுக்க  இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினர் தலையிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here