நவீன மாறுதலுக்கு எற்ப தொழில் நுட்பத் திறனை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்:வேதமூர்த்தி

நவீனமயமாகும் உலக நடப்புகளுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களின் தொழில் நுட்பத் திறனை வளர்த்துன்க கொள்ள வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி அறிவுறுத்தினார்.உலக நாடுகள் ரோபோட்டிக் முறைகளை கையாளும் காலத்தில் உள்ளன. தொழிற்சாலைகளில் மனிதர்கள் செய்யும் வேலைகளை ரோபோர்ட் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை கையாளும் திறனை மாணவர்கள் உட்பட அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அறிவியல் திறன் மேலோங்க வேண்டும் என்பதற்காக அஸ்தி ஏற்பாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவின் வழி ஆயிரமாயிரம் மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிபடுத்தி வருகின்றனர்.அஸ்தியின் இந்த முயற்சிக்கு அரசாங்கம் உதவிகள் வழங்க வேண்டும். இன்னும் அதிகமான பள்ளிகள் இதில் கலந்து கொண்டு அறிவியல் திறனை வளர்த்து கொள்ள வேண்டும் என்று வெற்றி   பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கிய அமைச்சர் வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார்.

தேசிய இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழாவில் பினாங்கு ஜாலான் சுங்கை தமிழ்ப்பள்ளி வாகை சூடியது. அஸ்தி ஏற்பாட்டிலான தேசிய இளம் ஆய்வாளர்கள் அறிவியல் விழாவில் சிறந்த புத்தாக்க படைப்புகளை வெளிப்படுத்திய பினாங்கு ஜாலான் சுங்கை தமிழ்ப்பள்ளி பிளாட்டினம் எனும் முதல் பரிசை வென்று 1,500 வெள்ளியை தட்டிச் சென்றது.ஜோகூர் பாரு துன் அமினா, யாஹ்யா அவால் ஆகிய தமிழ்ப்பள்ளிகள் தங்கப் பதக்கம் பரிசை வென்று தலா 1,000 வெள்ளியை தட்டிச் சென்றன.

சிகாம்புட், கூலாய் பெசார், செயின்ட் திரேசா கான்வெண்ட் ஆகிய தமிழ்ப்பள்ளிகள் வெள்ளி  பதக்கம் வென்று தலா 700 வெள்ளியை தட்டிச் சென்றன. அதே வேளையில் கங்கார் புலாய், காசல்பீல்டு, பாண்டார் பாரு சாலாக் திங்கி, லாடாங் மெந்தகாப் ஆகிய தமிழ்ப்பள்ளிகள் வெண்கலப் பதக்கம் வென்று தலா 500 வெள்ளியை தட்டிச் சென்றன. அறிவியல் திறனையும் 21ஆம் நூற்றாண்டின் கற்றல் திறனையும் மேம்படுத்த இளம் ஆய்வாளர்களுக்கு ஒரு தலமாக அஸ்தி இயக்கத்தின் ஏற்பாட்டில் 2019ஆம் ஆண்டின் தேசிய அளவிலான இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இந்த அறிவியல் விழாவை அறிவியல்  தொழில்நுட்ப புத்தாக்க இயக்கமான அஸ்தி வழிநடத்தி வருகிறது.தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக பிரத்தியேகமாக நடத்தப்பட்டு வரும் இந்த விழாவில் ஆண்டுதோறும் சுமார் 60,000 மாணவர்கள் பங்கேற்று தங்களது திறன்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்த அறிவியல் விழா மாணவர்களிடையே அறிவியல் பாடத்தின் ஆர்வத்தை ஏற்படுத்தி, சரியான பரிசோதனை முறையை கற்பித்து, ஆக்க சிந்தனைகளை விதைத்து, கண்டுபிடிப்பு, புத்தாக்கம் போன்றவற்றில் ஈடுபட செய்கிறது.

அதற்கு ஒரு சான்றாக இதற்கு முன்னர் நடந்த அறிவியல் விழாவில் பங்கு பெற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இங்கிலாந்து, தாய்வான், சீனா, கொரியா, ஹாங்காங், இந்தோனேசியா, ரஷ்யா போன்ற நாடுகளில் நடைபெற்ற அனைத்துலக புத்தாக்க போட்டிகளில் பங்கு பெற்று தங்கப்பதக்கங்களை வென்றனர்.இவ்வாண்டு பள்ளி அளவிலான அறிவியல் விழா வெற்றி கரமாக நடந்து முடிந்தது. மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசோதனை மற்றும் திரட்டேடு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இதில் முதலாம் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் பங்குபெற்றதாக அஸ்தி இயக்கத்தின் தலைவர் டாக்டர் முகமட் யூனுஸ் தெரிவித்தார்.

மாநில  அளவிலான அறிவியல் விழா சிலாங்கூர், கோலாலம்பூர், பேரா, பினாங்கு, கெடா, நெகிரி, மலாக்கா, பகாங், ஜோகூர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றது.இதில் தேர்வு செய்யப்பட்ட 70 தமிழ்ப்பள்ளிகளே தேசிய அளவிலான இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழாவில் கலந்து கொண்டனர். பரிசோதனை அடிப்படையில் முதல் சுற்றும் அஸ்தி வழங்கிய கருப்பொருள் ஆய்வு இரண்டாவது சுற்றிலும் மேற்கொள்ளப்பட்டது.

கண்காட்சியில் வைக்கப்பட்ட மாணவர்களின் ஆய்வுகள் தொடர்பில் நீதிபதிக்கும் பொதுமக்களுக்கும் மாணவர்களே விளக்கமளித்ததாக அவர் கூறினார்.இந்த அறிவியல் விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. முதல் 10 இடங்களில் வெற்றி  பெற்ற தமிழ்ப்பள்ளிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மாநில  அளவிலான அறிவியல் விழா சிலாங்கூர், கோலாலம்பூர், பேரா, பினாங்கு, கெடா, நெகிரி, மலாக்கா, பகாங், ஜோகூர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட 70 தமிழ்ப்பள்ளிகளே தேசிய அளவிலான இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழாவில் கலந்து கொண்டனர். பரிசோதனை அடிப்படையில் முதல் சுற்றும் அஸ்தி வழங்கிய கருப்பொருள் ஆய்வு இரண்டாவது சுற்றிலும் மேற்கொள்ளப்பட்டது.

கண்காட்சியில் வைக்கப்பட்ட மாணவர்களின் ஆய்வுகள் தொடர்பில் நீதிபதிக்கும் பொதுமக்களுக் கும் மாணவர்களே விளக்கமளித்ததாக அவர் கூறினார். இந்த அறிவியல் விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. முதல் 10 இடங்களில் வெற்றி  பெற்ற தமிழ்ப்பள்ளிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here