5 கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருக்கும் நோக்கியா

ஒரு காலத்தில் செல்போன் என்றாலே அது ‘நோக்கியா’ தான். பிறகு டெக்னாலஜியில் அதிரடியான மாற்றங்கள் வந்து ஸ்மார்ட்போன்கள் மொபைல் சந்தையை ஆக்கிரமித்தன. ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் கபளீகரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய ‘நோக்கியா’ மொபைல் சந்தையை விட்டு  வெகு தூரம் விலகிப்போய்விட்டது. இருந்தாலும் அவ்வப்போது சில தயாரிப்புகளை வெளியிட்டது.

அவை வயதானவர்கள் பயன் படுத்தும் போனாக மாறிவிட்டது.  இழந்த சந்தையை மீட்டெடுக்க இப் போது புதுப்பொலிவுடன் லேட்டஸ்ட் டெக்னாலஜியின்  துணையுடன்  களமிறங்கியிருக்கிறது ‘நோக்கியா’.உலகில் முதல் முறையாக 5 கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

‘நோக்கியா 9 ப்யூர்வியூ’ என்பது அந்த மாடலின் பெயர். ஆக்டோ- கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 845 பிராசஸர், 6 ஜிபி ரேம், 5.99 இன்ச் டச்ஸ்க்ரீன் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்கு தளம், 3,320mAh பேட்டரி திறன், வெளியே எடுக்க முடியாதபடிக்கு பேட்டரி வடி வமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒயர்லெஸ் சார்ஜ் வசதியும் உண்டு.

12 எம்பி திறன் கொண்ட ஐந்து கேமராக்கள், ஆட்டோ ஃபோகஸ் வசதி, தொலைவில் இருப்பதை தெளிவாக படம் பிடிக்க அதிநவீன சென்சார், வைடு ஆங்கிள் வசதி, அத்துடன் செல் ஃபிக்காக பிரத்யேகமாக 20 எம்பியில் ஒரு கேமரா, 128 ஜிபி ஸ்டோரேஜ், இரண்டு சிம்கள், ஃபேஸ் அன்லாக் வசதி, நீர் மற்றும் தூசு புகாத பாதுகாப்பு, வலிமையான டிஸ்பிளே கிளாஸ் என அசத்துகிறது ‘நோக்கியா’வின் புது வரவு. விலை ரூ.49,999.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here