73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு லடாக்கில் சென்ற தோனிக்கு உற்சாக வரவேற்பு..!

லடாக்: நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு லடாக் சென்ற தோனி அங்கிருந்த ராணுவ வீரர்கள் மத்தியல் உரையாற்றினார். இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி 38. கடந்த 2011 முதல் துணை ராணுவ படையின் பாராசூட் பிரிவில் கவுரவ ‘லெப்டினென்ட்’ கர்னல் ஆக உள்ளார். உலகக் கோப்பை தொடருக்கு பின் ராணுவ பயிற்சியில் ஈடுப்பட இருந்ததால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரிலிருந்து விலகினார். இந்திய ராணுவத்தின் பாரசூட் ரெஜிமெண்டில் பயிற்சி பெற்று, தற்போது விக்டர் படையுடன் இணைந்து காஷ்மீரில் ரோந்து பணியில் உள்ளார். இந்நிலையில் ராணுவ சீருடையில் லடாக் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு லடாக் சென்ற தோனி அங்கிருந்த ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றி உள்ளார். ராணுவ வீரர்களும் தோனியை உற்சாகமாக வரவேற்று உள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து ராணுவ ஜெனரல் மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களின் உடல்நலம் குறித்து விசாரித்து உள்ளார். பின்னர் லடாக்கில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்ற தோனி அங்கிருந்த மாணவர்கள் மத்தியிலும் உரையாற்றினார். தொடர்ந்து தோனி சியாச்சின் செல்ல உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here