கோலாலம்பூர்
சர்ச்சைக்குரிய மத போதகர் ஸாக்கிர் நாயக் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன், பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.ராமசாமி மற்றும் இன்னும் மூவரின் மீது போலீஸ் புகாரை அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி மற்றும் முன்னாள் தூதர் டென்னிஸ் ஜே இக்நேசியஸ் ஆகியோரை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் பிறந்து மலேசியாவில் அடைக்கலம் தேடி வந்திருக்கும் ஸாக்கிர் அந்தப் புகாரை ஷா ஆலம் நீதிமன்றத்தில் செய்துள்ளார்.
மேற்கண்ட ஐவரும் தாம் பேசியதை புரிந்து கொள்ளாமல் திருத்தி, தமக்குக் களங்கம் கற்பிக்கும் நோக்கில் அறிக்கைகளை வெளியிட்டிருப்பது கெட்ட நோக்கத்திற்காகவும் தங்களின் அரசியல் பிழைப்புக்காகவும் செய்ததாக ஸாக்கிர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் தூதர் இக்நேசியஸ், தமது அறிக்கையில் தாம் கெட்ட மனப்போக்குக் கொண்டவராகச் சித்திரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இன அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அவர்களின் அறிக்கைகளை விசாரணை செய்து போலீசார் தகுந்த நடவடிக்கையை எடுக்கும்படி ஸாக்கிர் கேட்டுக் கொண்டார்.