தேர்தலில் போஸ்டர்கள் தவிர்க்கப்படலாம் – அப்துல் ரஷிட்

ஈப்போ

அடுத்த பொதுத்தேர்தலில் பதாதைகளுக்கு தடை விதிக்க தேர்தல் உருமாற்று பணிக்குழு(இஆர்சி) பரிந்துரை செய்துள்ளது.

அந்தப் பரிந்துரை அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் தாக்கல் செய்யப்படும் என இஆர்சியின் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

தேர்தல் காலங்களில் அளவுக்கதிகமான போஸ்டர்கள் அசெளகரியத்துக்கு இடைஞ்சலாக இருக்கிறது. மேலும், அதற்கு செலவு அதிகம் என்பதால், அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆயினும், உட்புறப் பகுதிகளில் மக்கள் வேட்பாளரைத் தெரிந்து கொள்ள விரும்புவதால், சில இடங்களில் அனுமதிக்கப்படும்.

வெளிநாட்டில் இருக்கும் மலேசியர்கள் வாக்களிக்க, சம்பந்தப்பட்ட நாடுகளின் உதவி நாடப்படும். வாக்குகளைச் சேகரித்து, அங்கேயே எண்ணி முடிவை அறிவிக்கும் பரிந்துரையும் அளிக்கப்பட்டுள்ளதாக அப்துல் ரஷிட் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here