ஜகார்த்தா
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா பூமியில் வேகமாக மூழ்கிட வரும் நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் அதிகமாக பயன்படுத்தப் படுவதாலும் கடல் நீர் மட்டம் உயர்வதாலும் உலகம் வெப்பம் அடைவதாலும் ஏற்படும் தாக்கம் காரணமாகவும் இந்த நகரம் கடலில் மூழ்கும் அபாய கட்டத்தில் உள்ளது.
அதே நிலை நீடித்தால் வரும் 2050ஆம் ஆண்டுக்குள் நகரின் மூன்றில் ஒரு பங்கு கடலில் மூழ்கி காணாமல் போகும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் .கடலோர பகுதிகளில் 4 மீட்டர் அளவுக்கு காணாமல் போய்விட்டன. சில கட்டிடங்கள் பூமிக்குள் புதைந்துவிட்டன.
இதன் காரணமாக தலைநகரத்தை போர்னியோ தீவுக்கு மாற்றப் போவதாக அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார்.
இது தவிர்க்க செயற்கை தீவு ஒன்றை அமைக்கும் திட்டமும் இருக்கிறது .அதற்கு சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என மதிப்பிடப்படுகிறது .இதற்கான திட்டச் செலவு பெரிய அளவில் இருப்பதால் அதை நிறைவேற்றுவது தாமதமாகி வருகிறது என தெரிய வருகிறது.