ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட்களை பயன்படுத்தி 4 தீவிரவாதிகள் ராஜஸ்தானுக்குள் ஊடுருவி இருப்பதாக தகவல்

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட்களை பயன்படுத்தி 4 தீவிரவாதிகள் ராஜஸ்தானுக்குள் ஊடுருவி இருப்பதாக தகவல் வந்ததையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை அடுத்த தினம் மத்திய உளவுத்துறை  இந்த தகவலை கொடுத்துள்ளது. இதனையொட்டி ஜெய்பூர் விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஓட்டல்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையங்களிலும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் அனைத்து வாகனங்களும் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. தீவிரவாதிகள் ஊடுருவியதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், அவர்களின் வரையப்பட்ட உருவப்படங்களும் போலீசாரால் அனைத்து காவல் நிலையங்கள், சோதனை சாவடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தீவிரவாத தாக்குதல் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு கருதி ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேச எல்லை பகுதிகள் மூடப்பட்டுள்ள நிலையில் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் போலீசார் உஷார் நிலையில் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here