இண்டா வாட்டருக்கு ஓர் இந்தியர் தலைமையேற்றார்!

நீர் நிலம் இயற்கைவள அமைச்சின் கீழ் செயல்படும்  இண்டா வாட்டர் (Indah Water Konsortium) நிறுவனத்திற்குப் புதிய தலைமை செயல் முறை அதிகாரியாக ஒரு பொறியாளரான நரேந்திரன் மணியம் இம்மாதம் பொறுப்பேற்றார்.

இதற்கு முன் ரேன் ஹில் நீர் தெக்னோலேஜ் நிறுவனத்தில் சிறந்த சேவையாற்றிய நரேந்திரன் மணியம், அந்நிறுவனத்திற்குப்  பல வெளிநாட்டு மற்றும் உள்ளூர் குத்தகைகளையும் பெற்றுக் குறிப்பிட்ட காலத்தில் வெற்றிகரமாகக் கட்டுமானங்களை நிறைவேற்றி அந்நிறுவனத்தை ஒரு இலாபகரமான நிறுவனமாக மாற்றியமைத்துள்ளார்.

அவர் திட்டமிடல், வணிக மேம்பாடு, நீர், கழிவுநீர் மேம்பாடுகளிலும், நீர் மறுசுழற்சியிலும் சிறந்த அனுபவத்தைக் கொண்டுள்ளவர் என்பதால்  அவரின் தலைமைத்துவத்தில் இண்டா ஓட்டர் சேவைகள் நாட்டில் மேம்படவும், குடிநீர் மாசுபடும்  சம்பவங்களைத் தவிர்க்கவும் அவரின் ஆற்றல் அனுபவங்கள் உதவும் என்று எதிர்பார்க்கப் படுவதாக நீர் நிலம் இயற்கைவள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதற்கு முன்பு அதே பதவியை வகித்த பைசால் ஓஸ்மான் அவர்களின் பதவி ஒப்பந்த காலத்தை அரசாங்கம் மீண்டும் நீடிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here