மலேசிய ரிங்கிட்டின் வீழ்ச்சிக்கு பேங்க் நெகாரா மட்டுமே காரணமில்லை- டாக்டர் வீ

கோலாலம்பூர்:

லேசிய ரிங்கிட்டின் மதிப்பு வீழ்ச்சிக்கு பேங்க் நெகாரா மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது என்று டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.

DAP எதிர்க்கட்சியாக இருந்தபோது, ரிங்கிட் மதிப்பு குறையும் போது அது ஆளும் அரசைக் குறை கூறிக்கொண்டே இருக்கும் என்று மசீச தேசிய தலைவரான அவர் கூறினார்.

இப்போது DAP ஆளும் அரசாங்கமாக இருப்பதால், பாரிசான் நேசனலை அவர்கள் இனி குறை கூற முடியாது, எனவே பேங்க் நெகாராவின் கவர்னரை பதவி விலகக்கோருவதும், அதன் நிர்வாகத்தையும் பலிகடாவாக ஆக்குவதும் பொறுப்பற்ற செயல் என்று அவர் அக்கட்சியை சாடினார்.

“இது நிச்சயமாக இந்நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவை!” என்று இன்று(ஏப்ரல் 17) வெளியிட்டுள்ள ஒரு பேஸ்புக் பதிவில் டாக்டர் வீ கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here