ஆஷஸ் 3வது டெஸ்ட் இன்று தொடக்கம்

லீட்ஸ்

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா மோதும் 3வது டெஸ்ட் போட்டி, ஹெடிங்லி மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது.இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் 251 ரன் வித்தியாசத்தில் வென்ற  ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை பெற்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த விறுவிறுப்பான 2வது டெஸ்ட், எத்தரப்புக்கும் வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிந்தது,இந்த நிலையி, 3வது டெஸ்ட் லீட்ஸ், ஹெடிங்லி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. ஆஸி. அணியில் ஸ்டீவன் ஸ்மித் காயம் காரணமாக விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு தொடரில் தொடர்ச்சியாக 2 சதம் மற்றும்  92 ரன் விளாசி இருந்த ஸ்மித் இல்லாதது, ஆஸி. அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.

அதே சமயம், ஸ்மித்தின் காயத்துக்கு காரணமாக இருந்த வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், இங்கிலாந்து அணியின் பிரம்மாஸ்திரமாக உருவெடுத்துள்ளார். அவரது அதிவேக பவுன்சர்கள் எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலைய  வைக்கின்றன என்றால் மிகையல்ல. முன்னிலையை அதிகரிக்க ஆஸ்திரேலியாவும், சமன் செய்ய இங்கிலாந்தும் வரிந்துகட்டுவதால் இப்போட்டி மிகவும் சுவாரசியமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here