வாஷிங்டன்
அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் மோடி நலமா என்ற பெயரிலான மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர் .இந்திய அமெரிக்கரான இந்த மாநாடு டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது.
இது தொடர்பான மாநாட்டில் ஏற்பாட்டாளர்கள் டெக்ஸாஸ் இந்திய அமைப்பு கூறியதாவது:- மோடி நலமா மாநாட்டுக்கு இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர் .இதில் பங்கேற்க எந்த கட்டணமும் கிடையாது .விருப்பம் உள்ளவர்கள் தொடர்ந்து முன்பதிவு செய்யலாம். வடக்கு அமெரிக்காவில் இந்திய பிரதமர் நேரடியாக உரையாற்றும் மிகப் பெரிய நிகழ்ச்சியாக இது அமையும். இதேபோல் போப் பிரான்சிஸ் தவிர்த்து பிற நாட்டை சேர்ந்த தலைவர் ஒருவர் உரையாடும் மிகப்பெரிய நிகழ்ச்சியாகும் இது இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர
மோடி அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு வருகை தர உள்ளார். செப்டம்பர் 27-ம் தேதி யூஸ்டன் நகருக்கு வரும் அவர் தொழில் துறையினரையும் அமெரிக்காவில் வாழும் இந்திய சமூகத்தினரையும் சந்திக்க உள்ளார். அமெரிக்காவில் 5 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். அமெரிக்காவின் எரிசக்தி தலைநகராக விளங்கும் ஹூஸ்டனின் மட்டும் சுமார் 1.3 லட்சம் இந்திய அமெரிக்கர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது