வீட்டிற்குப் போகலாம் என நச்சரித்த சிறுவன் – தாயாரால் கொலை

மொஸ்கோ

இரவு விருந்தின் போது வீட்டிற்குப் போகலாம் அம்மா என்று நச்சரித்த 2 வயது சிறுவனை, அவனின் தாய் எட்டு முறை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் கிரோவ் என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது.

தனித்து வாழும் தாயான அன்னா சிக்‌ஷினா, 29 என்பவர் தனது மகனை உடன் அழைத்துக் கொண்டு இரவு விருந்திற்காக நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அங்கே வந்திருந்த ஆண்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவரின் மகன் வீட்டிற்குப் போலாம் என்று நச்சரித்துள்ளான். வீட்டிற்குச் செல்ல கதவைத் திறந்தபோது, ஆத்திரமடைந்த அன்னா கத்தியால் மகனை பலமுறை  குத்திக் கொன்றதாக  உள்ளூர் ஊடகம் வெளியிட்ட செய்தியின் வழி தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கைதாகும் முன்னர், தமது  தவற்றை அந்தப் பெண் ஒப்புக் கொண்டதாகப் போலீசார்  தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here