சாலை அடாவடித்தனம் – ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு

காஜாங்

வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையின் 293.5 ஆவது கிலோ மீட்டரில் சைட் முகமட் டேனியல் சைட் ஸாக்கிர் எனும் காரோடிக்கு மரணம் விளைவித்த ஆடவரின் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது. ஈவ் வேய் லியாங் அக்குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றவியல் சட்டம், பிரிவு 302இன் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை விதிக்கப்படும்.

வழக்கை செவிமடுத்திய மாஜிஸ்திரேட் நோர் அஃபிடா இட்ரிஸ் வழக்கை செப்டம்பர் 27க்கு ஒத்தி வைத்தார்.

அரசுத் தரப்பில் சித்தி நூர் ஹஃபிசான் ஸக்காரியா ஆஜரான வேளையில், குற்றாவாளியின் சார்பில் எஸ்.செல்வம் மற்றும் வர்கீஸ் ஒன்னி ஆகியோர் ஆஜராயினர்.

சைட் முகமட்டுக்கும் ஈவ் ஆகியோரின் மோதல் ஆகஸ்டு 10ஆம் தேதி பிற்பகல் 1.45 மணிக்கு என்எஸ்இ நெடுஞ்சாலையில் ஏற்பட்டது. அதனை மற்ற பயணிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

குற்றம் சாட்டபட்டவர், ஆத்திரத்தில் காரை வேகமாகச் செலுத்தி சைட் முகமட்டை சாலைத் தடுப்போடு மோதியுள்ளார்.

படுகாயம் அடைந்த சைட் முகமட் டேனியல் நீலாய் மருத்துவ மையத்தில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here