டெல்லி
பாஜக மூத்த தலைவர் உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாதுகாப்பு கோரி கடிதம் எழுதியுள்ளார்.லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. யாதவ் பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து மிகவும் முக்கியமான வழக்கை விசாரிப்பதால் கீழமை நீதிபதிக்கு பாதுகாப்பு அவசியம் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீதிபதிக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து உத்திரப்பிரதேச அரசு பதில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.