தீபிகா பார்ட்டியில் போதை மருந்து?

பிரபல பாலிவுட் இயக்குனர், தயாரிப்பாளர் கரண் ஜோஹர் சில தினங்களுக்கு முன் தனது வீட்டில் ‘வீக் எண்ட் பார்ட்டி’ நடத்தினார். பாலிவுட் நடிகர்கள்  ரன்பீர் கபூர், சாஹித் கபூர், வருண் தவான், அர்ஜுன் கபூர், விக்கி கவுசல், நடிகைகள் தீபிகா படுகோன், மல்லிகா அரோரா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். பார்ட்டியில் மது பரிமாறப்பட்டதுடன் போதை மருந்தும் பயன்படுத்தப்பட்டதாக அகாலிதல் எம்எல்ஏ மஜிந்தர் சிங் சிர்சா பரபரப்பு புகார் கூறினார். இயக்குனர் நடத்திய பார்ட்டியல் போதை மருந்து பயன்படுத்தியது கலாச்சார சீர்கேடு என அவர் குற்றம் சாட்டினார்.

எம்எல்ஏ கூறிய புகரை அறிந்த கரண் ஜோஹர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் கூறும்போது,’நட்சத்திரங்கள் சிலரை ஒரு வார கடின உழைப்புக்கு பிறகு ரிலாக்ஸாக இருக்க வேண்டும் என்பதற்காக அழைத்து எனது வீட்டில் பார்ட்டி வைத்தேன். அந்த பார்ட்டியை நான் வீடியோவாக வெளியிட்டேன். அதில் பிரச்னையான நிகழ்வு இருந்திருந்தால் அந்த வீடியோவை நான் எப்படி வெளியிடுவேன்.

அந்தளவுக்கு நான் முட்டாள் இல்லை. பார்ட்டி டேபிளில் போதை பவுடர் இருந்ததாக கூறுவது தவறு. அங்கிருந்த ஒரு விளக்கின் வெளிச்சம்தான் டேபிளில் எதிரொலித்தது. அதை பவுடர் என்று தவறாக எண்ணிக்கொண்டிருக்கின்றனர். பார்ட்டியில் சிலர் ஒயின் வைத்திருந்தார்கள். இன்னும் சிலர் பேசிக்கொண்டிருந்தார்கள்.

நடிகர் விக்கி கவுசல் டெங்கு ஜுரத்திலிருந்து மீண்டு வந்துகொண்டிருந்ததால் எலுமிச்சை கலந்த சுடு நீர் குடித்தார். நிலைமை இப்படி இருக்க இல்லாத ஒன்றை பெரிதுபடுத்தியிருப்பதை ஏற்க முடியவில்லை. இப்படியான புகாரால் பிரபலங்களை என் வீட்டிற்கு அழைத்து பேசக்கூட பயமாக இருக்கிறது. அடிப்படை ஆதாரமில்லாமல் யாராவது மீண்டும் இதுபோன்ற புகார்களை கூறினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ என்றார் கரண் ஜோஹர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here