கோம்பாக்
நாட்டின் சட்டத்துக்கு மேலானவர்கள் யாரும் இல்லையென்றும் அனைவரும் அதனை மதிக்க வேண்டுமென உள்துறை அமைச்சார் டான்ஶ்ரீ முகைதீன் யாசின் கேட்டுக் கொண்டார்.
அதில் ஸாக்கிரும் அடங்குவார் என்றும் அவரின் மீதான விசாரணை இன்னும் தொடர்வதாகவும் ஸாஹிட் குறிப்பிட்டார்.
ஸாக்கரை முஸ்லிம்கள் சமய அறிஞராகக் கருதி அவரைக் தற்காக்க வேண்டுமெனும் கருத்தில் இருந்தாலும், அவர் மீதான விசாரணை தொடரும் என இஸ்லாமிய பல்கலைக்கழகக் கருத்தரங்கில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
குற்றமிழைத்தவரை சொந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டுமென சட்டம் எதுவும் மலேசியாவில் இல்லை. எனவே, ஸாக்கிரை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் சம்பந்தமான முடிவை அரசே எடுக்கும்.
அண்மையில் சைட் சாடிக், ஸாஹிட்டுக்கு விருந்து வைத்தது பற்றிக் குறிப்பிட்ட அவர், அது விசாரணையைப் பாதிக்காது என்றும் அமைச்சர்கள் பலரும் அவரை சந்தித்து வருவது இயல்பான ஒன்று என தெரிவித்தார்.