ஸாக்கிர் நாய்க் உட்பட யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை மொஹிடின்

கோம்பாக்

நாட்டில் யாரும் சட்டத்திற்கு புறம்பாக எதையும் செய்ய முடியாது என உள்துறை அமைச்சர் மொஹிடின் யாசின் கூறியுள்ளார். இதில் ஸாக்கிர் நாய்க்கும் அடங்குவார் என அவர் மேலும் கூறினார். இஸ்லாமியர்களால் அதிகம் போற்றப்படும் ஸாக்கிர் நாய்க் இனவாதக் கருத்துகளை வெளியிட்டார் எனக் குற்றஞ்சாட்டி அவர் மீது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான புகார்களின் அடிப்படையில் போலிசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், ஸாக்கிர் திரும்ப அவர் நாட்டிற்கு அனுப்பப்படுவாரா அல்லது மாட்டாரா எனும் விவாதம் போலிசாரின் விசாரணையை பாதிக்கப்போவதில்லை. அவர் நாடு கடத்தப்பட வேண்டும் எனும் முடிவெடுப்பது போலிசாரின் அதிகாரத்தில் இல்லை. மேலும்,ஒரு நாட்டின் அரசாங்கம் முன்வைக்கும் கோரிக்கைக்காக ஒருவரை நாடு கடத்த வேண்டும் என்பதில்லை. நியாயமான காரணம் இருப்பின், ஒருவரை நாடு கடத்த வேண்டிய அவசியம் மலேசியாவுக்கு இல்லை. இருப்பினும், போலிசாரின் விசாரணை முடிவிற்காக காத்திருப்போம் என முஹிடின் மேலும் கருத்துரைத்துள்ளார்.

அதே சமயத்தில், அமைச்சர் சைட் சாடிக், ஸாக்கிர் நாய்க்குடன் விருந்துபசரிப்பில் கலந்துக் கொண்டது குறித்து கருத்து கேட்டபோது, அது அவரின் தனிப்பட்ட செயல். அது அரசாங்கத்தின் செயல்பாடு என அர்த்தமாகிவிடாது என முஹிடின் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here