
காட் ஜாவி ஓவிய எழுத்துக் கல்வியை அறிமுகப்படுத்தினால் எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என கூறும் ஒரு குழுவினரின் செயல் ஆணவத்தனமான முட்டாள்தனம் என விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாடிக் சாடியுள்ளார்.
தேர்வுகளில் உள்ளடங்காத மூன்று பக்க ஜாவி எழுத்துக் கல்விக்கு பயந்து அதுவும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் தீர்மாணிக்கட்டும் என கூறப்பட்டிருதும் சம்பந்தப்பட்ட குழுவினர் பிள்ளைகளை கல்வி பயில அனுப்ப மாட்டோம் எனக் கூறியுள்ளனர். இதைவிட யாரும் முட்டாள்தனமாக நடந்துக் கொள்ள முடியாது என” சைட் சாடிக் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஒரு அமைச்சராக அவர் முட்டாள் எனும் சொல்லை பயன்படுத்தியது ஏற்றுக் கொள்ள முடியாது என நெட்டிசன்கள் சிலர் கண்டணம் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குழுவை சில தரப்பினர் தங்களின் நோக்கத்திற்காக தவறாக பயன்படுத்திக் கொண்டனர். பல இந்தியர்கள் அவர்களது கருத்தை கண்டித்துள்ளனர். ஆனால் ஒரு அமைச்சராக அவர்களை முட்டாள் என அழைத்திருக்கக் கூடாது. அவர்களும் இந்நாட்டு பிரஜைகள்தான். அவர்களுக்கு நீங்கள் விளக்கமளித்திருக்க் வேண்டும். என ஒரு நெட்டிசன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த சைட் சாடிக், நாங்களும் ஒரு மாதக் காலமாக விளக்கிக் கொண்டுதான் வருகிறோம், ஆனால் அவர்கள் ஒருவரின் கல்வியை பணயமாக வைத்து கோரிக்கை முன்வைக்க கூடாது. இதை ஆணவம் என்றும் கூறாமல் வேறு என்ன சொல்வது எனக் கூறியுள்ளார்.