சென்னை
தமிழக காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா வெளியிட்ட அறிக்கை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் தலைமையில் 26ம் தேதி (இன்று) காலை 10 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கண்டன பேருரையாற்றுகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவரும், மக்களவை உறுப்பினருமான கே.ஜெயக்குமார் தொடக்க உரையாற்றுகிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள்.போராட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னணி தலைவர்கள், இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், பிரிவுகள் மற்றும் துறைகளின் மாநில தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.