சைட் சாடிக் மீது சட்ட நடவடிக்கை அருண் துரைசாமி

கோலாலம்பூர்

ஜாவி-அரேபிய சித்திர எழுத்தை தாய்மொழிப்பள்ளிகளில் போதிப்பதை எதிர்ப்போரை ஆணவ முட்டாள்கள் என வர்ணித்த அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் மன்னிப்பு கேட்க வேண்டுமென செக்காட் கூட்டமைப்பின் தலைமைச் செயலாளர் அரண் துரைசாமி கேட்டுக் கொண்டார்.

மன்னிப்பு கேட்க அவருக்குக் கொடுக்கப் பட்ட 48 மணி நேர காலக்கெடு முடிவடைந்ததால், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையின் ஆவணங்கள் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி, வியாழக்கிழமை அவரிடம் வழங்கப்படும் என அருண் தெரிவித்தார்.

ஆணவ முட்டாள் என சைட் சாடிக் கூறிய பின்னர், அதனை ஆதரித்தும் எதிர்த்தும் ஆயிரக் கணக்கானோர் சமூக ஊடகங்களில் தங்களின் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். இன சர்ச்சையைக் அது கிளப்பி விட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய ஸாக்கிர் நாயக்கிற்கு விருந்து கொடுத்து கூடிக் குளாவியதை எதிர்த்து வரும் கண்டனங்களைத் திசை திருப்பவே அவர், ஆணவ முட்டாள் எனும் வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்.

மலாய்க்காரர் அல்லாதோரின் பொருள்களின் மீது ஜாவி எழுத்துகளைப் பொறிக்கக் கூடாது என்றும் அவர்களின் தயாரிப்புப் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டுமென்ற பிரசாரத்தைத் தொடக்கியவர்கள் மீது போடோ சோம்போங் எனும் வார்த்தையை சைட் சாடிக் பிரயோகிக்காமல் இருப்பது ஏன் என அருண் கேள்வி எழுப்பினார்.

இஸ்லாம், தேசியம், மலாய்க் காரர்களுக்கும் எதிரானவர்கள் என எங்களின் மீதும் செக்காட் அமைப்பின் மீதும் முத்திரை குத்தும் சைட் சாடிக் பெரும் தவறை இழைத்து விட்டதாக அருண் துரைசாமி குறிபிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here