ஷா ஆலம்
கொலை செய்யப்பட்ட கிரேடல் பண்ட் தலைமை செயல்முறை அதிகாரி 2015இல் தமது வீட்டில் ஆட்கள் புகுந்து அட்டகாசம் புரிந்ததாகப் போலீசில் புகார் தெரிவித்திருந்தார்.
அதனை விசாரணை செய்த போலீசார், நஸ்ரின் ஹசானின் வீட்டுச் சுவரில், அறையில் மற்றும் தலையணையில் லிப்ஸ்டிக்கினால் கிறுக்கப்பட்ட படங்கள் காணப்பட்டதாகப் பதிவு செய்திருந்தனர்.
அந்த வழக்கில் அரசின் 3ஆவது சாட்சியான புகைப்படக்காரர் ஜுமர்டி முர்சலிம், அதனை புகைப்படம் எடுத்ததாகவும் அறையில் துணிகள் இரைந்து கிடந்ததாகவும் மடிக்கணினி ஒன்று நொறுக்கப்பட்டு கிடந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.