மகாதீர் மோடி சந்திப்பு – ஸாக்கிர் விவகாரம் அதிகம் பேசப்படவில்லை.

ரஷ்யா

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மற்றும் இந்திய பிரதமர்  நரேந்திர மோடியும் ரஷ்யாவில் சந்தித்த போது காஷ்மீர் விவகாரம் பற்றியே அதிகம் பேசியதாகவும் ஸாக்கீர் நாயக் விவகாரம் மேலோட்டமாக மட்டும் மோடியால் முன்வைக்கப்பட்டதாகவும் வெளியுறவு துறை அமைச்சர் சைஃபுடின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஸாக்கீர் நாயக் மீண்டும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவது பற்றி மகாதீரிடம் மோடி வலியுறுத்தியதாகவும்  இரு நாட்டு அதிகாரிகள் அது தொடர்பான தகவல்களைப் பறிமாரி வருவதாகவும் அந்நாட்டு செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால் , இந்த சந்திப்பில் ஜம்மு, காஷ்மீர் விவகாரங்களே மோடி முக்கியமாக விளக்கியதாகவும் இந்த விவகாரத்தில் ஐநாவின் தீர்மானத்தை அனைத்து தரப்பினரும் பின்பற்ற மகாதீர் ஆலோசனை வழங்கியதாகவும் சைஃபுடின் கூறினார்.

அதன் பின்னரே, மோடி ஸாக்கீர் நாயக் விவகாரம் பற்றி மேலோட்டமாக கூறியதாகவும் இரு நாட்டு அதிகாரிகள் அது பற்றி பேச்சுக்கள் நடந்ததாகவும் தெரிவித்தார். மகாதீர் அதற்கு பதில் ஏதும் கூறவில்லை என்றார் சைஃபுடின்.  ஸாக்கீர் நாயக் பிரச்சனை மலேசியா- இந்தியா உறவைப் பாதிக்காது என்று அமைச்சர் குறிபிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here