அறுவருக்கு எச்.ஐ.வி வைரஸைப் பரப்பிய மலேசியருக்குச் சிறை

ஏய்ட்ஸ் வியாதிக்கான , எச்.ஐ.வி வைரஸ் தொற்றுக் கொண்ட 35 வயது மலேசிய ஆடவர், கடந்த ஐந்து வருடமாக மருத்துவ சோதனைக்கு வராததோடு மேலும் 6 ஆண்களோடு உடல்சேர்க்கை கொண்டு அவர்களுக்கும் அந்த வைரஸ் தொற்றுவதற்கான காரணமாக இருந்த குற்றத்திற்காக சிங்கப்பூரில் 3 ½ ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டான்.

அவர் உடல்சேர்க்கை கொண்ட பிற ஆண்கள் பரிசோதனையில் எச்.ஐ.வி கிருமி தொற்றியது கண்டறியப்பட்ட பின்னர் பகுதி நேர முடி திருத்தனராக வேலை செய்யும் அந்த நபரை சிங்கப்பூர் தேசிய பொது சுகாதார பிரிவு மருந்து பரிசோதனைக்கு வர கட்டளையிட்டது. ஆனால், தமக்கு நேரம் இல்லை, இதற்கு முறை செய்த பரிசோதனையில் தமக்கு எச்.ஐ.வி கிருமி இல்லை என்றும் ஏமாற்றியுள்ளார். அதன் பிறகு கைது செய்யப்பட்டு பரிசோதித்ததில் அவருக்கு எச்.ஐ.வி. கிருமி இருப்பது கண்ட்பிடிக்கப்பட்டது. இவரால் மேலும் 6 ஆடவர்களும் இப்போது எச்.ஐ.வி கிருமி பீடிக்கப்பட்டுள்ளனர்.

தமது நிரந்தர வசிப்பிட தகுதி மீட்டுக்கொள்ளப்படும் அச்சத்தில் தாம் பரிசோதனைக்கு வரவில்லை என நீதிமன்றத்தில் அந்நபர் காரணம் கூறியுள்ளார். நீதிமன்றம் அந்த மலேசிய ஆடவரின் பெயரை வெளியிடக்கூடாது என உத்தரவு பிறத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here