பள்ளி வளாகத்தில் இந்திய தலைவர்களின் ஓவியங்கள் சர்ச்சையாக்காதீர் தலைமையாசிரியர்.

சுங்கை சிப்புட்

பேராக் சுங்கை சிப்புட்டில் உள்ள மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளியில் இந்திய தலைவர்களின் ஓவியத்தை பள்ளியின் வளாகத்தில் வரைந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஓவியத்தைப் பார்த்த ஒருவர் அதனை படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தது பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் சிலர் இச்செயலை நாட்டுப்பற்று இல்லாததைக் காட்டுவதாக கூறியுள்ளனர். அவர்களில் சிலர் உள்நாட்டு தலைவர்கள் பலர் இருக்கு இந்திய நாட்டுத் தலைவர்களின் ஓவியத்தை வரைவதன் அவசியம் என்ன என பள்ளி நிர்வாகத்தை சாடியுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள பள்ளி தலைமையாசிரியர் திரு முத்துசெல்வன், பள்ளி நிர்வாகம் நாட்டுப்பற்று இல்லாமல் இப்படி செய்ததாக கூறியதை மறுத்துள்ளார். பள்ளி வளாகத்தின் வெளிபுறத்தில் வெளிநாட்டு தலைவர்களின் ஓவியங்கள் முதலில் வரையப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக பள்ளி வளாகத்தின் உட்புறத்தில் உள்நாட்டு தலைவர்களின் படத்தை வரையவிருந்ததாகவும், அதற்குள் இவ்விவகாரம் இப்படி பூதாகரமாக ஆக்கப்பட்டுவிட்டதாகவும் முத்துசெல்வன் கூறினார்

மேலும், சுவர் ஓவியங்கள் வரைவது அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் திட்டமாகும். பிற பள்ளிகளிலும் தலைச்சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியவாதிகளின் ஓவியங்கள் இருக்கின்றனவே. நம் நாட்டு இலக்கியவாதி உஸ்மான் அவாங் உட்பட பலரின் ஓவியங்களை பள்ளியின் உட்புறத்தில் வரைய பள்ளி நிர்வாகம் திட்டமிருப்பதையும் அவர் விளக்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here