
பாசிர் மாஸ்
கிளந்தான் போலிசாரின் ஒத்துழைப்போடு புக்கிட் அமான் மேற்கொண்ட ஓப்ஸ் தவ்கான் சோதனை நடவடிக்கையில் 10.5 மில்லியன் ரிங்கிட் பெறுமான 77.61 கிலோ கொண்ட 700,000 குதிரை மாத்திரைகளைப் பறிமுதல் செய்ததாக புக்கிட் அமான் போதைப்பொருள் புலனாய்வு இலாகா தலைவர் முகமட் காலில் காதர் முகமட் தெரிவித்தார்.
அன்றைய திடம் பாசிர் மாசில் 3 பேரைக் கைது செய்த பின்னர், அந்தப் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அதற்கு முன்னதாக அந்த நபரின் கூட்டாளிகளான 19லிருந்து 53 வயதான 3 பேர் பாசிர் மாஸ், குபாங் குவார், ஜாலான் லூபுக் கியாட்டில் பிற்பகல் 12 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.
சோதனையில் 77.61 கிலோ எடையிலான 700,000 சைக்கோடிரோப்பிக் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாவும் அவை அண்டை நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டு மொத்தமாகவும் சில்லரையாகவும் உள்நாட்டில் விற்கப்பட்டு வந்துள்ளது கண்டுபிடிக்கப் பட்டது.
அந்தக் கைதினைத் தொடர்ந்து, இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர், சவூதி மெக்காவுக்கு உம்ரா தொழுகைக்காகச் செல்லவிருந்த 37 வயது போதைப் பொருள் தலைவன் என நம்பப்படும் போலீசாரால் கைது செய்யப்பட்டான்.
அதே தினத்தன்று மாலை 5 மணிக்கு ஜாலான் யாக்குபியாவில் நடத்தப்பட்ட சோதனையில் 48 வயது மாது ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அந்தக் கைது நடவடிக்கையில் 476,000 ரிங்கிட் பெறுமான பல வாகனங்களும் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான அனைவரும் 7 நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டு 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் வழி விசாரிக்கப்படுவர்.
இதனிடையே செப்டம்பர் 7இல் இருந்து 9ஆம் தேதி வரை கிளந்தானிலும் பகாங்கிலும் நடத்தப்பட்ட ஓப்ஸ் டேம்ன் தோக்கான் சோதனை நடவடிக்கையில் 7 பெண்கள் உட்பட 88 பேர் கைது செய்யப் பட்டதோடு 189,000 ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருளும் 372,000 ரிங்கிட் பெறுமான சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், தும்பாட்டில் சிக் சாவுர் கைத்துப்பாக்கி ஒன்றும் 88, 9எம் எம் துப்பாக்கிக் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றவியல் சட்டம் பிரிவு 117 மற்றும் 1952ஆம் ஆண்டு ஆபாயகர போதைப்பொருள் சட்டம், பிரிவு 39பி இன் கீழ் விசாரணை செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.