பென்ஷன் திட்டம் ரத்தா? பி எஸ் எம் எதிர்ப்பு

 

கோலாலம்பூர் – அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய (பென்ஷன்) திட்டத்தை அரசாங்கம் நிறுத்தக் கூடாது என்று பிஎஸ்எம் தலைவர் டாக்டர் ஜெயகுமார் நேற்று வேண்டுகோள் விடுத்தார்.

சமூகப் பாதுகாப்பையும் மக்களின் வாழ்க்கையையும் பாதிக்கச் செய்யும் எந்தக் கொள்கையையும் பிஎஸ்எம் கட்சி எதிர்க்கும் என்றார் அவர்.அந்த அடிப்படையில் பென்ஷன் திட்டத்தை அகற்றும் பரிந்துரையை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார். முதியோர் நலன் காக்க பிரபஞ்ச ஓய்வூதியத் திட்டத்தை அரசாங்கம் அறிமுகம் செ செய்தால் மலேசியா முன்னேற்றத்தை நோக்கி நகர முடியும் என்று அவர் கூறினார். நாட்டின் துரித வளர்ச்சியில் இருந்து யாரும் விடுபடக்கூடாது என்பதை உறுதி செய்யும் கடமை அரசாங்கத்திற்கு உள்ளது.

பி40 தரப்பு மக்களுக்கு மனநிறைவைத் தரும் குறைந்தபட்ச சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். வயதான காலத்தில் பலர் போதிய சேமிப்பு இன்றி சிரமப்படுவதைக் கருதி பணி ஓய்வு வயதை 65 ஆக உயர்த்தும்படி எம்டியூசி பரிந்துரைத்துள்ளது என்றார் அவர்.

– எம்.ஏ.அலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here