லண்டன் – டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக்கின் சாதனையை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார். ஒரு அணிக்கு எதிராக தொடர்ந்து 10 அரை சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ஸ்டீவ் ஸ்மித் பெற்றள்ளார்.
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் இந்த சதனையை படைந்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் தொடரின் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதனால் களமிறங்கிய இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 82 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன் எடுத்திருந்தது. ஜாக் லிச் 10 ரன்னுடனும், ஜோஸ் பட்லர் 64 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 2வது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. கூடுதலாக 6 ரன் சேர்த்த பட்லர் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜாக்கும் ஆட்டமிழக்க, இங்கிலாந்து 87.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 294 ரன் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் மார்ஷ் 5, பேட் கம்மினஸ் 3, ஜோஷ் ஹசல்வுட் 2 விக்கெட்களையும் கைபற்றினர்.
அடுத்து விளையாடத் தொடங்கிய ஆஸ்திரேலியாவும் தடுமாற்றத்துடன் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் 5 ரன்னிலும், மார்கஸ் ஹாரிஸ் 3 ரன்னிலும் ஜோப்ரா ஆர்ச்சரின் வேகத்தால் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவின் மார்னஸ், ஸ்டீவன் ஸ்மித் இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தனர். அரை சதம் அடிக்க ஆவலுடன் இருந்த மார்சனசை 48 ரன்னில்(10 பவுண்டரி) ஆட்டமிழக்க செய்தார் ஆர்ச்சர். பின்னர் ஸ்மித்துடன், மாத்யூ வாடே ஜோடி சேர்ந்து விளையாடினார்.
இந்நிலையில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் 80 ரன்கள் எடுத்திருந்த போது வோக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஒரு அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 10 அரைசதங்கள் அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். இந்த சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லியை பின்னுக்குத் தள்ளி நம்பர் 1 அந்தஸ்தை கைப்பற்றிய அவர், சமீபத்திய ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஆஷஸ் போட்டியில் விளையாடிய 10 இன்னிங்சில் மட்டும் ஸ்டீவ் ஸ்மித் 239, 76, 102, 83, 144, 142, 92, 211, 82, 80 அடித்து டெஸ்ட் போட்டிகளில் அசுர பார்மில் உள்ளார் என்பதை நிரூபித்து வருகிறார்.