கோலாலம்பூர், ஜூலை 10-
புக்கிட் கியாரா ஜுவாரா அரங்கில் நடைபெற்ற 2023 தேசியப் பூப்பந்துப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கே.லட்ஷனா சக விளையாட்டாளர் வோங் லிங் சிங்கை 16-21, 21-17, 21.19 புள்ளிகளில் தோற்கடித்து கிண்ணத்தை வென்றார்.
தேசிய அளவில் இது இவரின் முதலாவது வெற்றியாகும். இதற்கு முன்னதாக 18 வயதிற்குக் கீழ்ப்பட்ட தேசிய பூப்பந்து விளையாட்டுப் போட்டியில் அவர் வெற்றிபெற்றிருக்கின்றார்.
இந்த வெற்றிக்காக லட்ஷனா 7,000 ரிங்கிட் பரிசீத் தொகையுடன் கோப்பையைப் பெற்றார். அதேசமயத்தில் லின் சிங் 3,500 ரிங்கிட் பரிசீத் தொகையைப் பெற்றார்.
இதனிடையே ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லியோங் ஜுன் ஹாவ் வெற்றிபெற்றார். மலேசியப் பூப்பந்து சங்கத்தைப் பிரதிநிதித்து இந்த 23 வயது ஜுன் ஹாவ் களமிறங்கினார்.
சக விளையாட்டாளர் முகமட் ஷாகின் எய்மான் ஷாயரை 21-16, 21-13 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தார். ஜுன் ஹாவ் 10,000 ரிங்கிட் பரிசீத் தொகையுடன் கிண்ணத்தையும் வென்றார். முகமட் ஷாகின் 5 ஆயிரம் ரிங்கிட் பரிசீத் தொகையைப் பெற்றார்.









