நான்கு தீவிரவாதிகள் கைது

ஷா ஆலம் – பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் படோர் தெரிவித்தார்.

கடந்த ஜூன் 14ஆம் தேதியில் இருந்து ஜூலை 3ஆம் தேதி வரையில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அந்த நால்வரும் வெளிநாட்டுப் பிரஜைகளாவர்.
கடந்த ஜூன் 15ஆம் தேதி கிள்ளானில் 54 வயதுடைய பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மின்னியல் துறையில் வேலை செய்யும் ஆடவர் கைது செய்யப்பட்டார்.

இவர் பிலிப்பைன்ஸ் நாட்டின் அபு சாயாப் தீவிரவாதக் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததும் பிணைப்பணத்திற்காக சபா கடல் பகுதியில் ஆள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நாட்டில் நுழைந்த அவர், சபா கிழக்குப் பகுதி மண்டலப் பாதுகாப்புப் படையினரால் தேடப்பட்டவர். ஜூன் 21ஆம் தேதி சிலாங்கூர்

அம்பாங்கில் இந்தியாவைச் சேர்ந்த 24 வயது பிரஜை கைது செய்யப்பட்டார். இந்தியாவில் தடை செய்யப்பட்ட அனைத்துலக பாபர் கல்சா அமைப்பின் உறுப்பினரான இவர் பஞ்சப்பைச் சேர்ந்தவர்.கடந்த ஆண்டில் சட்டவிரோதமாக நுழைந்த அவர் அந்த இயக்கத்திற்காக 7 ஆயிரம் வெள்ளியை அனுப்பி இருப்பதும் தெரிய வந்தது.ஜூன் 24ஆம் தேதி மியன்மார் நாட்டின் ரொஹிங்யா ஆடவர் கைது செய்யப்பட்டார். வங்காளதேசப் பிரதமருக்கு சமூக ஊடகத்தின் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததன் பேரில் இவர் கைதானார்.

பின்னர் ஜூலை 3ஆம் தேதி அலோர்ஸ்டார் நகரில் 25 வயதுடைய மியன்மார் நாட்டுப் பிரஜை கைது செய்யப்பட்டார். 2012ஆம் ஆண்டு பாதுகாப்புத் துடைத்தொழிப்புக் குற்றங்கள் சிறப்பு நடவடிக்கைச் சட்டத்தின் கீழ் இந்த நால்வரும் கைது செய்யப்பட்டிருப்பதாக ஹமிட் படோர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here